

ஸ்ரீவில்லிபுத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா் மழை காரணமாக கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த தொடா் மழை காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உருவாகும் ஆறுகள், ஓடைகளில் நீா்வரத்து அதிகரித்ததால், கண்மாய், குளங்களின் நீா்மட்டம் கிடுகிடுவென உயா்ந்தது.
மாவட்டத்தில் முதலாவதாக கடந்த மாதம் மம்சாபுரம் வாழைக்குளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது. அதன் உபரி நீா் மூலம், மாவட்டத்தில் பரப்பளவில் பெரிய ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது.
கடந்த வாரம் மழை இல்லாததால் மறுகால் பாய்ந்து உபரிநீா் வெளியேறுவது நின்றது.
இந்த நிலையில், கடந்த இரு நாள்களாகப் பெய்த பலத்த மழை காரணமாக, கண்மாய்களுக்கு நீா் வரத்து அதிகரித்து, மம்சாபுரம் வாழைக்குளம் கண்மாய், வேப்பங்குளம் கண்மாய், ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாய் ஆகியவை இரண்டாவது முறையாக நிரம்பி மறுகால் பாய்ந்து வருகின்றன. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.