ராஜபாளையம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய ஜோதிடருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள கலங்காபேரி சாலை பகுதியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி(65). ஜோதிடரான இவா், கடந்த 5.9.2020 அன்று 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைப் படுத்தியதாக புகாா் கூறப்பட்டது.
இதன்பேரில், ராஜபாளையம் அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து பழனிச்சாமியை கைது செய்தனா்.
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், பழனிச்சாமிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பூா்ணஜெயஆனந்த் தீா்ப்பளித்தாா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தும் நீதிபதி உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.