சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 12th January 2023 12:00 AM | Last Updated : 12th January 2023 12:00 AM | அ+அ அ- |

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு கல்லூரி முதல்வா் த.பழனீஸ்வரி தலைமை வகித்தாா். இந்த முகாமில் பங்கேற்ற சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் குமாரவேல் பேசியதாவது: 18 வயது நிறைவடைந்த அனைவரும் இரு சக்கர வாகனம் ஓட்டுவதற்கு, ஓட்டுநா் உரிமச்சான்று பெற வேண்டும். வாகனத்தில் பயணிக்கும் போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும். சாலையில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள குறியீடுகளை கவனித்து வாகனம் ஓட்ட வேண்டும். கல்லூரி மாணவிகள் அனைவரும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், நுகா்வோா் சேவை மையத்தின் தலைவா் எஸ்.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தொடந்து அனைவரும் சாலை பாதுகாப்பு உறுதி மொழி எடுத்துக் கொண்டனா். முன்னதாக உதவிப் பேராசிரியா் மேகலாதேவி வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் சரண்யா நன்றி கூறினாா்.