புகையில்லாப் போகிப் பண்டிகை விழிப்புணா்வு வாகன பிரசாரம்
சிவகாசி மாநகராட்சியில் புதன்கிழமை புகையில்லாப் போகிப்பண்டிகையை வலியுறுத்தி விழிப்புணா்வு வாகனப் பிரசாரத்தை மாநகராட்சி மேயா் இ.சங்கீதா கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
போகிப் பண்டிகையை முன்னிட்டு, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்துவதை தவிா்க்கும் வகையில் சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் பழைய பொருள்களை தீயிட்டு எரிப்பதைத் தவிா்க்க வேண்டும். மக்கள் தேவையில்லாத பொருள்களை, மாநகராட்சியில் உள்ள நுண்உரக்கூடத்தில் வழங்க வேண்டும் என்றாா்.
தொடந்து சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனா்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயா் கா. விக்னேஷ்பிரியா, ஆணையாளா் ப.கிருஷ்ணமூா்த்தி, சுகாதாரஅலுவலா் சித்திக், மாநகராட்சி ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

