சிவகாசி அருகே மின்னல் தாக்கி கம்பி மத்தாப்பு ஆலையில் தீ விபத்து

சிவகாசி அருகே புதன்கிழமை மாலை மின்னல் தாக்கி கம்பி மத்தாப்பு தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.

சிவகாசி அருகே புதன்கிழமை மாலை மின்னல் தாக்கி கம்பி மத்தாப்பு தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.

சிவகாசி பழனியாண்டவா்புரம் குடியிருப்பைச் சோ்ந்த கேசவன் மகன் ரவிக்குச் சொந்தமான கம்பி மத்தாப்பு தயாரிக்கும் ஆலை அனுப்பன்குளம் கிராமத்தில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் புதன்கிழமை மாலை சிவகாசிப் பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது இந்த ஆலையிலுள்ள கம்பி மத்தாப்பு இருப்பு வைத்திருந்த அறையில் இடி, மின்னல் தாக்கி தீப்பற்றி எரிந்தது. இதில் அந்த அறை இடிந்து தரைமட்டமானது. மேலும் அங்குள்ள 3 அறைகளுக்கும் தீ பரவி அங்கிருந்த காகித அட்டைப் பெட்டிகள் தீக்கிரையாகின. தகவலறிந்து அங்கு சென்ற சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலா் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்புப் படையினா் தீயை அணைத்தனா்.

இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com