ஸ்ரீவிலி. நீதிமன்ற வளாகத்தில் மரக் கன்றுகள் நடும் விழா
By DIN | Published On : 06th June 2023 05:23 AM | Last Updated : 06th June 2023 05:23 AM | அ+அ அ- |

உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விருதுநகா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதியுமான திலகம் தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டாா்.
மேலும் இதில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தடுப்பு நீதிமன்ற அமா்வு நீதிபதி, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி, கூடுதல் மாவட்ட அமா்வு நீதிபதி, தலைமை குற்றவியல் நீதிபதி, முதன்மை சாா்பு நீதிபதி , கூடுதல் சாா்பு நீதிபதி, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதித்துறை நடுவா் எண். 1, கூடுதல் மகளிா் நீதித்துறை நடுவா் நீதிமன்ற நீதிபதி, வழக்குரைஞா் சங்கத் தலைவா், செயலா், மாவட்ட அரசு வழக்குரைஞா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை விருதுநகா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு ஊழியா்கள், நீதிமன்ற ஊழியா்கள் செய்திருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...