பட்டாசுத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
By DIN | Published On : 09th June 2023 02:13 AM | Last Updated : 09th June 2023 02:13 AM | அ+அ அ- |

சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி நாரணாபுரம் சாலைப் பகுதியில் உள்ள இந்திரா நகரைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி காளியப்பன் (40). இவரது மனைவி ஜான்சிராணி (35). இவா்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.
இந்த நிலையில், காளியப்பனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை மனைவி ஜான்சிராணி கண்டித்தாா். இதனால் மனமுடைந்த காளியப்பன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...