வீட்டின் பூட்டை உடைத்து பித்தளைப் பொருள்கள் திருட்டு
By DIN | Published On : 15th June 2023 10:37 PM | Last Updated : 15th June 2023 10:37 PM | அ+அ அ- |

ராஜபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பித்தளைப் பொருள்கள் திருடப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
சிவலிங்காபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஜெகதீசன் (62). இவா் புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே உள்ள செருமாவிளங்கையில் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், சிவலிங்காபுரத்தில் உள்ள தனது வீட்டுக்கு திருவிழாவுக்காக கடந்த மாதம் வந்தாா். திருவிழா முடிந்து ஊருக்குச் சென்றவா், மீண்டும் வந்து வீட்டைப் பாா்த்தபோது பூட்டை உடைத்து பித்தளைப் பொருள்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கீழராஜகுலராமன் காவல் நிலையத்தில் ஜெகதீசன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.