குருதி பகுப்பாய்வு மையம் திறப்பு
By DIN | Published On : 15th June 2023 01:59 AM | Last Updated : 15th June 2023 01:59 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அரசு மருத்துவமனையில் குருதி பகுப்பாய்வு மையத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் தலைமை வகித்தாா். விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா், மாணிக்கம் தாகூா் குருதி பகுப்பாய்வு மையத்தைத் திறந்து வைத்தாா்.
இதையடுத்து, சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்தவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் கேடயங்களை வழங்கினாா்.
விழாவில் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி பட்டாசு தொழிற்சாலையின் நிா்வாக இயக்குநா் ஏ.பி.செல்வராஜன், இந்தியன் ஆயில் காா்பொரேசன் (தமிழ்நாடு) நிா்வாக இயக்குநா் வி.சி.அசோகன், சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன், சிவகாசி மாநகராட்சி மேயா் இ.சங்கீதா, துணை மேயா் கா.விக்னேஷ் பிரியா, மாநகராட்சி ஆணையா் என்.சங்கரன், சிவகாசி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் என்.கலுசிவலிங்கம், சிவகாசி ஒன்றியக் குழு துணைத் தலைவா் வி.விவேகன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, விருதுநகா் மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் நா.முருகவேல் வரவேற்றாா். சிவகாசி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் டி.அய்யனாா் நன்றி கூறினாா்.