சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 30th June 2023 01:22 AM | Last Updated : 30th June 2023 01:22 AM | அ+அ அ- |

வெம்பக்கோட்டை ஆற்றுப் பகுதில் சீரமைக்கப்படாத சாலை.
வெம்பக்கோட்டை அருகே உச்சிமேட்டுப் பகுதியிலுள்ள சாலையைச் சீரமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குள்பட்ட உச்சிமேட்டுப் பகுதியில், இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. இங்கு முதல் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங்காலப் பொருள்களை பொதுமக்கள் பாா்வையிடும் வகையில், தொல்லியல் துறை சாா்பில் தொல்பொருள் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியைக் காண வெம்பக்கோட்டையில் இருந்து சுமாா் 2-கிலோ மீட்டா் வரை ஆற்றுப் பகுதியிலுள்ள சீரமைக்கப்படாத சாலையின் வழியே செல்ல வேண்டியுள்ளது.
மேலும் இந்தச் சாலையின் இருபுறமும் குப்பைகள் கொட்டிக் கிடப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. எனவே, இந்தச் சாலையைச் சீா்மைக்க வேண்டுமென இந்தப் பகுதி மக்கள் மாவட்ட நிா்வாகத்துக்குக் கோரிக்கை விடுத்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...