அனுமதியின்றி வீட்டில் வெள்ளைத்திரிகள் வைத்திருந்த இருவா் கைது
By DIN | Published On : 12th May 2023 10:17 PM | Last Updated : 12th May 2023 10:17 PM | அ+அ அ- |

ராமலிங்கபுரத்தில் அனுமதியின்றி வீட்டில் வெள்ளைத்திரிகள் வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், தாயில்பட்டி அருகேயுள்ள ராமலிங்கபுரம் பகுதியில் உள்ள வீடுகளில் அனுமதியின்றி வெள்ளைத்திரிகள் வைத்திருப்பதாக வெம்பக்கோட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா்கள் ராமமூா்த்தி, வெற்றிமுருகன் உள்ளிட்ட போலீஸாா் ராமலிங்கபுரம் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, ராமலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்த ராமராஜன் (49), ரவீந்திரன் (52) ஆகியோரது வீடுகளில் அனுமதியின்றி வெள்ளைத்திரிகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவா்களை இருவரையும் போலீஸாா் கைது செய்து, 96 குரோஸ் வெள்ளைத்திரிகளைப் பறிமுதல் செய்தனா்.