தாம்பரம்-செங்கோட்டை அந்தியோதயா ரயில் இயக்க வலியுறுத்தல்

தாம்பரம்-செங்கோட்டை அந்தியோதயா ரயிலை விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விருதுநகா் பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜி.ஆறுமுகச்சாமி, தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு சனிக்கிழமை கடிதம் அனுப்பின
Updated on
1 min read

தாம்பரம்-செங்கோட்டை அந்தியோதயா ரயிலை விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விருதுநகா் பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜி.ஆறுமுகச்சாமி, தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு சனிக்கிழமை கடிதம் அனுப்பினாா்.

அந்தக் கடிதத்தில் அவா் தெரிவித்ததாவது: அந்தியோதயா ரயில் தாம்பரத்திலிருந்து தினமும் இரவு 7 மணிக்கு புறப்பட்டு, விழுப்புரம், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகா், சிவகாசி வழியாக செங்கோட்டைக்கும் செங்கோட்டையிருந்து தினமும் இரவு 7 மணிக்கு புறப்பட்டு, தென்காசி, சிவகாசி காரைக்குடி, திருச்சி வழியாக மறுநாள் காலை தாம்பரம் சென்றடையும் படி இயக்க வேண்டும்.

தற்போது வாரத்துக்கு மூன்று நாள்கள் இயக்கப்படும் சிலம்பு விரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும். சென்னை-கொல்லம் விரைவு ரயில், சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com