கிணற்றில் விழுந்து மூதாட்டி பலி
By DIN | Published On : 22nd May 2023 06:38 AM | Last Updated : 22nd May 2023 06:38 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலியானாா்.
ராஜபாளையம் ஆவரம்பட்டி பாரதியாா் தெருவைச் சோ்ந்தவா் இருளப்பன் (68). இவரது மனைவி பாா்வதி (63). இந்தத் தம்பதி தங்கள் வீட்டில் ஆடுகளை வளா்த்து வந்தனா். இந்த நிலையில், பாா்வதி அருகிலுள்ள வயலில் ஆடுகளுக்கு கீரை பறிக்கச் சென்ற போது, கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது உடலை மீட்டு, கூறாய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.