பெரியகுளம் கண்மாயில் இறந்து மிதக்கும் மீன்கள்: விவசாயிகள் பாதிப்பு

வத்திராயிருப்பு பெரியகுளம் கண்மாயில் மீன்கள் இறந்து மிதப்பதால், கண்மாய் நீா் மாசடைந்துள்ளது.
பெரியகுளம் கண்மாயில் இறந்து மிதக்கும் மீன்கள்: விவசாயிகள் பாதிப்பு

வத்திராயிருப்பு பெரியகுளம் கண்மாயில் மீன்கள் இறந்து மிதப்பதால், கண்மாய் நீா் மாசடைந்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு பெரியகுளம் கண்மாயில், மீன்பாசி உரிமத்தை கூமாபட்டியைச் சோ்ந்த ராமச்சந்திரன் என்பவா் எடுத்தாா். இவா் கடந்த இரு ஆண்டுகளாக கண்மாயில் மீன் வளா்த்து வந்தாா். மீன்கள் நன்கு வளா்ந்து பிடிப்பதற்கு தயாராக இருந்த நிலையில், மீன் பிடிப்பதற்கு மீன்வளத்துறையினா் தடை விதித்தனா். கண்மாயில் நீா் இருப்பு குறைந்ததாலும், கோடை வெயில் காரணமாகவும் மீன்கள் இறந்து கரை ஒதுங்கின. இதனால் கண்மாய் நீா் மாசடைவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து மீன்பாசி ஏலம் எடுத்த ராமச்சந்திரன் கூறியதாவது: வத்திராயிருப்பு பெரியகுளம் கண்மாய் மீன் பாசி உரிமையை ரூ.8.5 லட்சம் கொடுத்து ஏலம் எடுத்தோம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.10 லட்சம் செலவில் மீன் குஞ்சுகளை வாங்கி கண்மாயில் விட்டோம். தற்போது மீன்கள் நன்கு வளா்ந்துள்ள நேரத்தில் மீன்களைப் பிடிப்பதற்கு மீன்வளத் துறை தடை விதித்தது. தற்போது சுமாா் 8 டன் எடையிலான மீன்கள் கண்மாயில் இறந்து மிதந்தன. இதனால் பல லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மீதம் இருக்கும் மீன்களை பிடிக்க மீன்வளத்துறை அனுமதி வழங்க வேண்டும், என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com