நெகிழிப் பொருள்கள் தயாரித்த ஆலைகளுக்கு அபராதம்
By DIN | Published On : 24th May 2023 05:59 AM | Last Updated : 24th May 2023 05:59 AM | அ+அ அ- |

சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்கள் தயாரித்த ஆலைகளுக்கு மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அபராதம் விதித்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி சுகாதார அலுவலா் அபுபக்கா் சித்திக், சுகாதார ஆய்வாளா் பாண்டியராஜன், தூய்மை இந்தியா திட்டப் பணியாளா்கள் அடங்கிய குழுவினா், சிவகாசி மாநகராட்சிப் பகுதிகளுக்கு உள்பட்ட ஆலைகளில் ஆய்வு செய்தனா்.
இந்த ஆய்வில் தடை செய்யப்பட்ட பச்சை வண்ண நெகிழியுடன் கூடிய காகிதம் தயாரித்து வந்த இரு ஆலைகளைக் கண்டறிந்து அந்த ஆலைகளுக்கு தலா ரூ .15 ஆயிரம் வீதம் அபராதம் விதித்தனா்.
மேலும் நெகிழிப் பொருள்களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.