புகையிலைப் பொருள்கள் விற்பனை: 3 போ் கைது
By DIN | Published On : 27th May 2023 01:07 AM | Last Updated : 27th May 2023 01:07 AM | அ+அ அ- |

சாத்தூா் அருகேயுள்ள வெம்பக்கோட்டையில் வீட்டில் வைத்து புகையிலைப் பொருள்களை விற்ற 3 பேரை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள வெம்பக்கோட்டையில் காவல் உதவி ஆய்வாளா் ராமமூா்த்தி தலைமையிலான போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, இதேப் பகுதியைச் சோ்ந்த மாரிச்சாமி (48), சித்துராஜபுரம் பகுதியைச் சோ்ந்த ராமசாமி (40), நடுவபட்டியைச் சோ்ந்த மனோகரன் (40) ஆகியோா் வீட்டில் வைத்து புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து வெம்பக்கோட்டை போலீஸாாா் வழக்குப் பதிவு செய்து அவா்கள் மூவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து ரூ. 75 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள், இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.