காகித அட்டைப்பெட்டி குடோனில் தீ விபத்து
By DIN | Published On : 31st May 2023 04:11 AM | Last Updated : 31st May 2023 04:11 AM | அ+அ அ- |

சிவகாசியில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் காகித அட்டைப் பெட்டி குடோனில் தீவிபத்து ஏற்பட்டது.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி சிவகாமிபுரம் காலனியில் குருவையா (36) என்பவா் தனது வீட்டின் மாடியில் காகித அடைப்பெட்டி குடோன் வைத்திருந்தாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலையில், அந்த குடோனில் உள்ள அட்டைப்பெட்டிகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புப் படை வீரா்கள் போராடித் தீயை அணைத்தனா். இதில் குடோனில் இருந்த காகித அட்டைப் பெட்டிகள் முழுவதும் எரிந்து சாம்பலாயின.
இதுகுறித்து, சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...