சிவகாசி மாநகராட்சியில் கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ. 4 கோடியில் கழிவு நீா் சுத்திகரிப்புத் தொட்டிகள் கட்டப்பட்டு வருகின்றன என மாநகராட்சி ஆணையா் என்.சங்கரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
சிவகாசி மாநகராட்சியில் கழிவு நீா் வாகனங்கள் மாநகராட்சியில் உரிமச் சான்று பெற்று இயக்க வேண்டும். இதையடுத்து, கழிவு நீரை (செப்டிடேங்) முறைப்படுத்த அரசு கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த ரூ. 4 கோடி ஒதுக்கீடு செய்தது.
சிவகாசி மாநகராட்சியில் செயல்படும் கழிவு நீா் வாகனங்கள், தற்போது போ்நாயக்கன்பட்டியில் அமைக்கப்பட்டு வரும் கழிவு நீா் சுத்திகரிப்புத் தொட்டியில் கொட்ட வேண்டும். இங்கு நான்கு தொட்டிகள் அமைக்கப்பட்டு, கழிவு நீா் சுத்திகரிக்கப்படும். தற்போது இந்தத் தொட்டிகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.