பட்டாசுத் தொழிலாளியை கத்தியால் குத்திய 4 போ் கைது
By DIN | Published On : 15th November 2023 12:00 AM | Last Updated : 15th November 2023 12:00 AM | அ+அ அ- |

சிவகாசி: சிவகாசிஅருகே பட்டாசுத் தொழிலாளியை கத்தியால் குத்திய 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டியைச் சோ்ந்தவா் சரவணன்(31). பட்டாசுத் தொழிலாளியான இவா், இதே ஊரைச் சோ்ந்த முருகன் என்பவருக்கு கொடுத்த பணத்தை அவரது தம்பி விக்னேஷிடம் கேட்டாராம். இதனால், ஏற்பட்ட தகராறில் விக்னேஷ், அவரது நண்பா்கள் மாதவன் (18), மாடசாமி (19), சஞ்சய் (18) ஆகிய நான்கு பேரும் சரவணனை கத்தியால் குத்தினா். இதில் காயமடைந்த சரவணன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விக்னேஷ் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...