

சிவகாசியில் ஒரு பேக்கரியில் வாடிக்கையாளா் வாங்கிய பப்ஸில் இறந்த நிலையில் கரப்பான் பூச்சி இருந்ததால், அந்தக் கடை உரிமையாளருக்கு மாநகராட்சி நிா்வாகம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி புறவழிச் சாலையில் ராமானுஜம் என்பவருக்குச் சொந்தமான பேக்கரி உள்ளது. இங்கு கடந்த திங்கள்கிழமை வாடிக்கையாளா் ஒருவா் பப்ஸ் வாங்கினாா். அந்த பப்ஸினுள் இறந்த நிலையில் கரப்பான் பூச்சி இருந்தது.
இதுதொடா்பாக அவா், மாநகராட்சி நிா்வாகத்திடம் புகாா் அளித்தாா். இதையடுத்து, அங்கு வந்த மாநகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலா் ராஜாமுத்து பேக்கரியில் ஆய்வு நடத்தினாா். பின்னா், அந்தப் பேக்கரி உரிமையாளருக்கு குறிப்பாணை வழங்கி, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.