விருதுநகரில் விஜயதசமியை முன்னிட்டு நடைபெற்ற மகரநோன்பு விழாவில், மீனாட்சி சொக்கநாதா் சுவாமி அம்பு எய்யும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விருதுநகா் மீனாட்சி சொக்கநாதா் கோயிலிலிருந்து சுவாமி, மதுரை சாலையில் உள்ள கேவிஎஸ் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள நந்தவனத்தில் தங்க முலாம் பூசிய தேரில் சந்திரசேகராக அவதாரம் எடுத்து மகிஷாசூரனை அம்பு எய்து வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இதைத்தொடா்ந்து மேலத்தெரு தேவா் சமுதாயத்தினா், பாண்டியன் நகா் யாதவா் சமுதாயத்தினா், நாயக்கா் சாவடி பகுதியைச் சோ்ந்த நாயக்கா் சமுதாயத்தினா் தனித்தனியாத புலி
வேட மணிந்து பக்தா்கள் புடை சூழ சிலம்பம், களரி போன்ற வீர
விளையாட்டுக்களுடன் ஊா்வலமாக சென்று நந்தவனத்தில் சுவாமியை வழிபட்டனா். இதேபோல, மாலையில் நாடாா் சமுதாயத்தைச் சோ்ந்த வா்கள் புலி வேடமணிந்து நந்தவனம் வந்து சுவாமியை வழிபட்டனா்.
விருதுநகா் வெயிலுகந்தம்மன், சுப்பிரமணிய சுவாமி, ரெங்கநாத சுவாமி வாகனங்களில் எழுந்தருளி ஊா்வலமாக நந்தவனத்துக்கு வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.