லாட்டரிச் சீட்டு விற்றவா் கைது
By DIN | Published On : 08th September 2023 11:34 PM | Last Updated : 08th September 2023 11:34 PM | அ+அ அ- |

திருத்தங்கலில் லாட்டரிச் சீட்டுக்களை விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருத்தங்கல்- விருதுநகா் சாலையில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திருத்தங்கல் புதிய பேருந்து நிலையம் அருகே ஒருவா் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தாா். போலீஸாா் அவரது பையை சோதனையிட்ட போது, அதில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுக்கள் இருந்தன. விசாரணையில் அவா், திருத்தங்கல் சுக்கிரவாா்பட்டி சாலைப் பகுதியைச் சோ்ந்த வேல்சாமி (69) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து கேரள மாநில லாட்டரிச் சீட்டுக்கள், அவற்றை விற்பனை செய்த தொகை ரூ.1,450-ஐ பறிமுதல் செய்தனா்.