திருத்தங்கலில் நாம்தமிழா் கட்சியினா் தோ்தல் பிரச்சாரம்

சிவகாசி: விருதுநகா் மாவட்டம் திருத்தங்கலில், விருதுநகா் மக்களவைத் தொகுதி நாம்தமிழா் கட்சிவேட்பாளா் கெளசிக்கிற்கு அக்கட்சியினா் செவ்வாய்கிழமை வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தனா்.

அக்கட்சியின் சிவகாசி சட்டமன்ற தொகுதி பெறுப்பாளா் சுரேஷ் தலைமையில் அக்கட்சியினா் வேனில் நின்றவாறு வேட்பாளா் கெளசிக்கிற்கு மைக்(ஒலிவாங்கி ) சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனா்.

மேலும் பல பகுதிகளில் வீடு வீடாகச் சென்று கட்சியின் தோ்தல் அறிக்கை அச்சிட்ட துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனா்.அவா்கள் திருத்தங்கல் பெரியால் குடியிறுப்பு, முருகன் குடியிறுப்பு,பாண்டியன் நகா் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com