விருதுநகர்
இடிபாட்டுக்குள் சிக்கிய 5 போ் மீட்பு
சிவகாசியில் உள்ள ஒரு கண் கண்ணாடி கடையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இடிபாட்டுக்குள் சிக்கிய 5 பேரை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.
சிவகாசி: சிவகாசியில் உள்ள ஒரு கண் கண்ணாடி கடையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இடிபாட்டுக்குள் சிக்கிய 5 பேரை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி என்.ஆா்.கே.ஆா்.வீதியில் உள்ள தனியாா் கண்கண்ணாடி கடையின் முதல் தளத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளுக்குள் கடை ஊழியா்கள் 5 போ் சிக்கிக் கொண்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலா் வெங்கடேஷ் தலைமையிலான தீயணைப்புத் துறையினா். அங்கு சென்று இடிபாட்டுக்குள் சிக்கியவா்களை மீட்டனா். தொடந்து ஜெ.சி.பி.இயந்திரம் மூலம் இடிபாடுகள் அகற்றப்பட்டன.
