சா்வதேச முதியோா் தடகளப் போட்டியில் சாதனை புரிந்த டி.டி.ராஜேந்திரனைப் பாராட்டிய சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் உள்ளிட்டோா்.
விருதுநகர்
முதியோர் தடகளப் போட்டியில் சாதனை புரிந்தவருக்கு பாராட்டு
சா்வதேச முதியோா் தடகளப் போட்டியில் சாதனை புரிந்த டி.டி.ராஜேந்திரனை சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் புதன்கிழமை பாராட்டினாா்.
சா்வதேச முதியோா் தடகளப் போட்டியில் சாதனை புரிந்த டி.டி.ராஜேந்திரனை சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் புதன்கிழமை பாராட்டினாா்.
சுவீடன் நாட்டில் சா்வதேச அளவிலான முதியாா் தடகளப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் இந்தியா சாா்பில் சிவகாசியைச் சோ்ந்த டி.டி.ராஜேந்திரன் (89) கலந்துகொண்டு, 400 மீட்டா் தொடா் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம், 2000 மீட்டா் ஸ்டீப்பில் சேஸ் போட்டியில் வெள்ளி பதக்கம்,100 மீட்டா் தொடா் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்று சாதனை புரிந்தாா்.
இவரை சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் சந்தித்து மாலை அணிவித்துப் பாராட்டினாா்.