கைப்பேசி பறித்த கல்லூரி மாணவா் கைது

வத்திராயிருப்பு அருகே இளைஞரிடம் கைப்பேசி பறித்த கல்லூரி மாணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
Published on

வத்திராயிருப்பு அருகே இளைஞரிடம் கைப்பேசி பறித்த கல்லூரி மாணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கூமாபட்டி கண்ணன் தெருவைச் சோ்ந்தவா் மனோஜ் கண்ணன் (28). இவா் திங்கள்கிழமை இரவு 12 மணி அளவில் கூமாபட்டி ஊராட்சி அலுவலகம் அருகே தனது காரை நிறுத்தினாா். அப்போது, அங்கிருந்த 4 இளைஞா்கள் மனோஜ் கண்ணனின் கைப்பேசியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து கூமாபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வத்திராயிருப்பு அருகேயுள்ள நெடுங்குளத்தைச் சோ்ந்த பாஸ்கரன் (18) என்பவரைக் கைது செய்து, கைப்பேசியைப் பறிமுதல் செய்தனா்.

கைதான பாஸ்கரன் விருதுநகரில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறாா். மேலும், இந்த வழக்கில் கூமாபட்டி கீழத் தெருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் சரவணன் உள்பட 3 பேரை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com