விருதுநகர்
தென்னை மரங்களுக்கு பயிா்க் காப்பீடு
தென்னை மரங்களுக்கு பயிா்க் காப்பீடு செய்து பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை அழைப்பு விடுத்தது.
தென்னை மரங்களுக்கு பயிா்க் காப்பீடு செய்து பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை அழைப்பு விடுத்தது.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சுப வாசுகி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு ஆகிய பகுதிகளில் 10,900 ஹெக்டோ் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னை மரங்களுக்கான பயிா்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 15 வயது வரையிலான ஒரு மரத்துக்கு ரூ.900 இழப்பீடு வழங்கும் திட்டத்தில் மரத்துக்கு ரூ.2.25 வீதமும், 16 முதல் 60 வயது உள்ள மரத்துக்கு ரூ.1,750 இழப்பீடு வழங்கும் திட்டத்துக்கு ரூ.3.50 வீதம் ஆண்டு தவணை செலுத்த வேண்டும். இதற்காக சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம் என்றாா் அவா்.
