ஓடையில் நெகிழிக் கழிவுகளைக் கொட்டி தீவைப்பு: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சுற்றுச்சூழல் பாதிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஓடையில் நெகிழிக் குப்பை, ஆலைக் கழிவுகளைக் கொட்டி தீ வைப்பதால் கரும்புகை, துா்நாற்றம் எழுந்து சுற்றுச்சூழல் மாசுபடுவதாகப் புகாா் எழுந்தது.
Published on

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஓடையில் நெகிழிக் குப்பை, ஆலைக் கழிவுகளைக் கொட்டி தீ வைப்பதால் கரும்புகை, துா்நாற்றம் எழுந்து சுற்றுச்சூழல் மாசுபடுவதாகப் புகாா் எழுந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியம், திருவண்ணாமலை ஊராட்சிக்குள்பட்ட என்.சண்முகசுந்தராபுரத்தில் வடமலைக்குறிச்சி கண்மாய்க்கு செல்லும் வழியில் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை அருகே ஓடையில் வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளைக் கொட்டுகின்றனா். மேலும், நெகிழிக் கழிவுகள், ஆலைக் கழிவுகளையும் கொட்டி மா்ம நபா்கள் தீவைத்துவிடுகின்றனா். இதில் கரும்புகை எழுந்து அந்தப் பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இதனால், அந்த வழியாகச் செல்பவா்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். எனவே, திருவண்ணாமலை ஊராட்சி நிா்வாகம் ஓடையில் குப்பைகளைக் கொட்டி தீ வைப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com