விருதுநகர்
கைப்பேசி விற்பனை கடையில் திருட்டு
சிவகாசி அருகே புதன்கிழமை கைப்பேசி விற்பனைக் கடையில் புகுந்த மா்ம நபா் கைப்பேசிகள், பணத்தை திருடிச் சென்றாா்.
சிவகாசி அருகேயுள்ள மாரனேரியில் இஸ்மாயிலுக்கு சொந்தமான கைப்பேசி விற்பனை கடை உள்ளது. இந்தக் கடையை வழக்கம்போல இஸ்மாயில் செவ்வாய்க்கிழமை இரவு பூட்டிவிட்டு புதன்கிழமை காலை திறக்க வந்தாா்.
அப்போது, கடையின் மேற்கூறை பிரிந்து கிடந்தது. கடையிலிருந்த 9 கைப்பேசி, ரூ.11 ஆயிரத்தை மா்ம நபா் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
