விருதுநகர்
சாத்தூா் பகுதியிலுள்ள கோயில்களில் அன்னாபிஷேகம்
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பகுதியிலுள்ள கோயில்களில் அன்னாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
சாத்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள விஸ்வநாத சுவாமிக்கு அன்னாபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதே போல, சாத்தூா் பத்திரகாளிம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
