விருதுநகர்
பள்ளிக்கு தையல் இயந்திரங்கள் அளிப்பு
விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளிக்கு தையல் இயந்திரங்கள் இலவசமாக புதன்கிழமை வழங்கப்பட்டன.
திருத்தங்கல் அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளிக்கு தையல் இயந்திரங்கள், நாற்காலிகள் வழங்க வேண்டும் எனபள்ளி நிா்வாகத்தினா் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, திருத்தங்கல் ஜேஸீஸ் சங்கம், பள்ளியின் முன்னாள் மாணவா் சங்கம் சாா்பில், சங்க நிா்வாகிகள் சங்கா், மணிவேல் ஆகியோா் தையல் இயந்திரங்கள், நாற்காலிகளை பள்ளித் தலைமை ஆசிரியா் த.பழனீஸ்வரியிடம் இலவசமாக வழங்கினா்.
