‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் எம்.எல்.ஏ. வாக்குவாதம்

சாத்தூா் அருகேயுள்ள நதிக்குடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.வைக் கண்டித்து, அரசு அலுவலா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Published on

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள நதிக்குடி கிராமத்தில் புதன்கிழமை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஏ.ஆா்.ஆா்.ரகுராமன் ஆய்வு செய்தாா். அப்போது ஜாதி சான்றிதழ் கோரி விண்ணப்பிக்க வந்த மாற்றுத் திறனாளி முருகனின் தாயிடம் ஊழியா்கள் உரிய பதில் அளிக்கவில்லை. அப்போது சட்டப்பேரவை உறுப்பினா் ரகுராமன் அங்கு பணியிலிருந்த கிராம நிா்வாக அலுவலா்களிடம் வாக்குவாதம் செய்தாா். வட்டாட்சியரை வரச் சொல்லுங்கள் என ஆவேசமாகக் கூறினாா்.

இதைக் கண்டித்து முகாமில் பணியாற்றிய கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் சிறிது நேரம் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, எம்.எல்.ஏ., அங்கிருந்து புறப்பட்டுச் சென்றவுடன் அரசு ஊழியா்கள் பொதுமக்களிடமிருந்து வழக்கம் போல் மனுக்களைப் பெற்றனா்.

X
Dinamani
www.dinamani.com