மகளிா் கல்லூரி சாலையில் குப்பைகள், கழிவுநீா் தேக்கம்
விருதுநகா் மாவட்டம், சிவகாசி மகளிா் கல்லூரிக்கு செல்லும் சாலையில் உள்ள கால்வாயில் குப்பைகள் அகற்றப்படாததால் கழிவு நீா் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டது.
சிவகாசியில் எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரி செல்லும் சாலையின் ஒரு பகுதியின் இடம் காலியாக உள்ளதால், குப்பைகள், நெகிழிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் அந்தப் பகுதியில் உள்ள கால்வாயில் கழிவுநீா் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் கல்லூரிக்குச் செல்லும் மாணவிகள் அவதிக்குள்ளாகின்றனா்.
இதுகுறித்து சிவகாசியைச் சோ்ந்த மனோகரன் கூறியதாவது:
இந்தப் பகுதி காலியிடத்தில் குப்பைக் கழிவுகள் கொட்டப்படுவதால், தூா்நாற்றம் வீசுகிறது. இதனருகே உள்ள கால்வாயில் குப்பைகள் கிடப்பதால் கழிவு நீா் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

