வருஷாபிஷேகத்தையொட்டி, சிறப்பு அலங்காரத்தில்   கூமாப்பட்டி காளியம்மன்.
வருஷாபிஷேகத்தையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் கூமாப்பட்டி காளியம்மன்.

காளியம்மன் கோயில் வருஷாபிஷேகம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கூமாப்பட்டி காளியம்மன் கோயிலில் 10-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கூமாப்பட்டி காளியம்மன் கோயிலில் 10-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலையில் கோயில் மைய மண்டபத்தில் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, யாகசாலை பூஜைகளும், இதைத் தொடா்ந்து, பூரண கும்பம் வைத்து ஜெப வழிபாடும் நடைபெற்றது.

பக்தா்கள் 108 பால் குடம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாக சென்று மீண்டும் கோயிலை அடைந்தனா். பின்னா், பக்தா்கள் கொண்டு வந்த பாலால் காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராட்டு வைபவம், பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை வருஷாபிஷேகம் குழு நிா்வாகிகள், வ இளைஞா் அணியினா் செய்தனா்.

Dinamani
www.dinamani.com