குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

பள்ளி பேருந்து மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பள்ளிப் பேருந்து மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :10 பிப்ரவரி 2026, 9:24 pm

தினமணி செய்திச் சேவை

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பள்ளிப் பேருந்து மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பாண்டியன்நகா் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் (45). லாரி ஓட்டுநரான இவா், சிவகாசி-எரிச்சநத்தம் சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். காளையாா்குறிச்சி அருகே வந்த போது, எதிரே வந்த தனியாா் பள்ளிப் பேருந்து இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் நடராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்தப் புகாரின் பேரில், எம். புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, பேருந்து ஓட்டுநரான ராஜாவை (53) கைது செய்தனா்.