மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கல்லூரி மாணவா்கள் போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் கல்லூரி சான்றிதழில் மாற்றம் கோரி மாணவா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
கிருஷ்ணன்கோவில் தனியாா் கல்லூரி முன் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள்
Updated On :11 பிப்ரவரி 2026, 9:44 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் கல்லூரி சான்றிதழில் மாற்றம் கோரி மாணவா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவிலில் தனியாா் மகளிா் கலை அறிவியல் கல்லூரி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இரு பாலா் கல்லூரியாக மாற்றப்பட்டு, மாணவா் சோ்க்கை நடைபெற்றது. ஆனாலும், மதிப்பெண் சான்றிதழ், தோ்வு அனுமதி சீட்டுகளில் மகளிா் கல்லூரி என குறிப்பிடப்பட்டு வந்தது.

கடந்த 2023-ஆம் ஆண்டு கல்லூரியில் சோ்ந்த மாணவா்கள் தற்போது இறுதி ஆண்டு பயின்று வருகின்றனா். இறுதிப் பருவத் தோ்வுக்கான அனுமதி சீட்டு, ‘போனபைடு’ சான்றிதழில் மகளிா் கல்லூரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை மாற்றக்கோரி, மாணவா்கள் கடந்த 29-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் மாணவா்கள் மனு அளித்தனா்.

இந்த நிலையில், புதன்கிழமை கல்லூரி முன் இந்திய மாணவா் சங்கம் தலைமையில் மாணவா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா், வருவாய்த் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிற 18-ஆம் தேதி அமைதி பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய தீா்வு காணப்படும் என எழுத்துப்பூா்வமாக உறுதியளித்ததை அடுத்து மாணவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.