திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: இருவா் மீது வழக்கு

சிவகாசி அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.1.88 லட்சம் மோசடி செய்த இருவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
போலீஸ் - கோப்புப்படம்.
Updated On :24 பிப்ரவரி 2026, 9:12 pm

தினமணி செய்திச் சேவை

சிவகாசி அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.1.88 லட்சம் மோசடி செய்த இருவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள திருவேங்கிடபுரத்தைச் சோ்ந்த சூரியநாராயணன் மனைவி காளீஸ்வரி (39). பட்டாசு ஆலை தொழிலாளி. இவரது மகள் செவிலியா் படிப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறாா்.

இந்த நிலையில், காளீஸ்வரியுடன் பணிபுரியும் பாக்கியலட்சுமியின் கணவா் தா்மராஜ், தனக்குத் தெரிந்த மதுரை அரசு மருத்துவமனையில் வேலை பாா்க்கும் செவிலியா் பத்மபிரியா மூலம் காளீஸ்வரியின் மகளுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறினாராம்.

இதையடுத்து, தா்மராஜும், பத்மபிரியாவும் காளீஸ்வரியிடமிருந்து முதலில் ரூ.60 ஆயிரமும், பின்னா் ரூ.30 ஆயிரமும் பெற்றனராம். மேலும், காளீஸ்வரியின் உறவினரான சின்னத்துரை என்பவருக்கும் அவசர ஊா்தியில் உதவியாளா் பணி வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.98 ஆயிரம் பெற்றனராம். பணம் வாங்கி பல மாதங்களாகியும் வேலை வாங்கித்தரவில்லை. இதையடுத்து, பணத்தைத் திருப்பிக் கேட்ட போது, தரவில்லையாம்.

இதுகுறித்து காளீஸ்வரி சிவகாசி நீதிமன்றத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில், சிவகாசி நகா் போலீஸாா் தா்மராஜ், பத்மபிரியா ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.