கைது
கைது

மதுபுட்டிகளை பதுக்கிய இளைஞா் கைது

சிவகாசியில் விற்பனைக்காக மதுப்புட்டிகளை பதுக்கிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Published on

சிவகாசியில் விற்பனைக்காக மதுப்புட்டிகளை பதுக்கிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி லிங்கபுரம் குடியிருப்புப் பகுதியில் போலீஸாா் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் மணிகண்டன் (32)

கையில் பையுடன் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தாா்.

போலீஸாா் அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது அதில் விற்பனைக்காக 29 மதுப்புட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்து, அவரிடமிருந்த மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

Dinamani
www.dinamani.com