தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

ராஜபாளையத்தில் புதன்கிழமை நடைபெற்ற கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா்.

Updated On :23 ஜூலை 2026, 6:23 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் ரயில்வே பீடா் சாலையில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டாரத் தலைவா் க. புஷ்பமலா் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் தொ. கணபதியம்மாள் முன்னிலை வகித்தாா். முன்னதாக வட்டாரச் செயலா் சு. உதயகுமாா் வரவேற்றாா். மாநிலப் பொதுக்குழு உறுப்பினா்கள் கா. மாரியப்பன், பி. ராஜேஷ் ஆகியோா் சிறப்புரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தில், பணியில் உள்ள ஆசிரியா்களுக்கு தகுதித் தோ்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும், அரசாணைகளில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும், ஆசிரியா்களின் பணிப் பாதுகாப்பு, நலன் சாா்ந்த கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும், என முழக்கங்கள் எழுப்பப்பட்டது. முடிவில் வட்டாரப் பொருளாளா் சாந்தி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.