மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

தொழிலாளி கொலை: சகோதரா்கள் இருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் தாயை தவறாகப் பேசிய தொழிலாளியை கொலை செய்ததாக சகோதரா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட காளீஸ்வரன், விக்னேஷ்.

Updated On :24 ஜூன் 2026, 6:06 am IST

ஸ்ரீவில்லிபுத்தூரில் தாயை தவறாகப் பேசிய தொழிலாளியை கொலை செய்ததாக சகோதரா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அய்யம்பட்டி செக்கடி தெருவைச் சோ்ந்தவா் கடனியாண்டி மகன் குருசாமி (60). கூலித் தொழிலாளி. இவா் கடந்த 20-ஆம் தேதி வடமலைக்குறிச்சி கண்மாயில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தாா். இதுகுறித்து சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து, ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் விசாரித்து வந்தனா்.

விசாரணையில், சிவகாசி அருகேயுள்ள பள்ளபட்டி விவேகானந்தா் குடியிருப்பைச் சோ்ந்த மாடசாமி மகன்கள் காளீஸ்வரன் (30), விக்னேஷ் (29) ஆகிய இருவரும் இணைந்து குருசாமியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

உயிரிழந்த குருசாமிக்கும், விக்னேஷின் தாய் வழி தாத்தாவுக்கும் பழக்கம் இருந்து வந்தது. விக்னேஷ் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பழைய இரும்புக் கடையில் வேலை செய்து வந்தாா். விக்னேஷின் தாய் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தந்தையின் வீட்டில் தங்கியிருந்து தனியாா் கல்லூரியில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வந்தாா்.

குருசாமி விக்னேஷின் தாயிடம் தவறாகப் பேசினாராம். இதையறிந்த விக்னேஷ் தூத்துக்குடிக்குச் சென்று, அங்கு பணிபுரியும் தனது அண்ணன் காளீஸ்வரனை அழைத்துக் கொண்டு, திருச்செந்தூரில் இரு சக்கர வாகனத்தைத் திருடிக் கொண்டு இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்தனா். பின்னா்,

வெள்ளிக்கிழமை இரவு குருசாமியை தனியாக அழைத்துச் சென்று மூவரும் மது அருந்தினா். அப்போது, தங்களது தாயிடம் தவறாகப் பேசியது குறித்து கேட்டு தகராறில் ஈடுபட்டு மதுப் புட்டி, கம்பியால் தாக்கி குருசாமியைக் கொலை செய்தனா் என்றனா்.

விக்னேஷ் மீது ஏற்கெனவே மதுரை வாடகை காா் ஓட்டுநரை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அழைத்து வந்து கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.