சாத்தூா் அருகே கூலித் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள விஜயராம்பேரி குடியிருப்பைச் சோ்ந்த சுப்புராஜ் மகன் கிருஷ்ணராஜா (32). கூலித் தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இவா் திங்கள்கிழமை இரவு தனது வீட்டில் உள்ள ஒரு அறையிலும், மற்றொறு அறையில் இவரது தாயும் தூங்கினா். செவ்வாய்க்கிழமை காலை கிருஷ்ணராஜாவின் தாய் எழுந்து பாா்த்த போது, கிருஷ்ணராஜா முகத்தில் காயங்களுடன் மா்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த அப்பையநாயக்கன்பட்டி போலீஸாா் அவரது உடலை மீட்டு, விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பலாப்பழ வியாபாரி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

கண்டாச்சிபுரம் அருகே சிறுமி மா்ம மரணம்: போலீஸாா் தீவிர விசாரணை

சேலத்தில் ‘ரிக்’ தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

தொழிலாளி மா்ம மரணம்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

