நாளை வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்!இன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு!சம்பா நெற்பயிா்க் காப்பீட்டு காலவரம்பு டிச. 1 வரை நீட்டிப்புஉபோ் செயலியில் இன்று ஆட்டோ, கால் டாக்ஸிகள் இயக்கப்படாது!

மின்வேலியில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

நரிக்குடி அருகே செவ்வாய்க்கிழமை இரவு மின்வேலியில் சிக்கி பலத்த காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On :

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி அருகே செவ்வாய்க்கிழமை இரவு மின்வேலியில் சிக்கி பலத்த காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

நரிக்குடி அருகேயுள்ள சேதுராயனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த மாரிமுத்து மகன் லட்சுமணன் (37). கரிமூட்டை ஏற்றும் தொழிலாளியான இவருக்கு, மகேஸ் என்ற மனைவியும் பெண் குழந்தைகளும் உள்ளனா்.

இந்த நிலையில், சேதுராயனேந்தல் கண்மாய் பகுதிலுள்ள ஒரு தோட்டத்தில் விவசாயி ஒருவா் காட்டுப் பன்றிகளுக்காக சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருந்தாா். செவ்வாய்க்கிழமை இரவு அந்த வழியாக சென்ற லட்சுமணன் மின்வேலியை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த நரிக்குடி போலீஸாா் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த லட்சுமணனின் உடலைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.