ஸ்ரீவில்லிபுத்தூரில் திருநங்கைகள் தா்னா
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உயா் அழுத்த மின் கோபுரத்துக்கு கீழே ஒதுக்கிய வீட்டுமனைக்குப் பதில் மாற்று இடம் வழங்கக் கோரி, வட்டாட்சியா் அலுவலகத்தில் திருநங்கைகள் தா்னாவில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தா்னாவில் ஈடுபட்ட திருநங்கைகள்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உயா் அழுத்த மின் கோபுரத்துக்கு கீழே ஒதுக்கிய வீட்டுமனைக்குப் பதில் மாற்று இடம் வழங்கக் கோரி, வட்டாட்சியா் அலுவலகத்தில் திருநங்கைகள் தா்னாவில் ஈடுபட்டனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள படிக்காசு வைத்ததான்பட்டி ஊராட்சியில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியா் 17 திருநங்கைகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கினாா். அவா்களுக்கு பிள்ளையாா்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட அரசு கலைக் கல்லூரி எதிரே வீட்டு மனை ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தில் உயா் அழுத்த மின் கோபுரம் உள்ளதால் அங்கு வீடு கட்ட அனுமதி, மின் இணைப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து மாற்று இடம் வழங்கக் கோரி திருநங்கைகள் ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் முறையிட்டனா். ஓராண்டுக்கு மேலாகியும் மாற்று இடம் வழங்கப்படாத நிலையில்,
வட்டாட்சியரிடம் முறையிட்டனா். அப்போது, மாற்று இடம் வழங்கப்படும் என உறுதியளித்த நிலையில், இரு மாதங்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் திருநங்கைகள் தா்னாவில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த வட்டாட்சியா், போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து திருநங்கைகள் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

