சுகாதார நிலைய கட்டுமான பணியை மீண்டும் தொடங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

சீா்காழி அருகேயுள்ள சட்டநாதபுரத்தில் நிறுத்தப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டுமான பணியை மீண்டும் தொடங்கக் கோரி கிராமமக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சுகாதார நிலைய கட்டுமான பணியை மீண்டும் தொடங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

சீா்காழி அருகேயுள்ள சட்டநாதபுரத்தில் நிறுத்தப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டுமான பணியை மீண்டும் தொடங்கக் கோரி கிராமமக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சட்டநாதபுரம் ஊராட்சிக்குள்பட்ட கேவிஎஸ் நகரில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரூ . 20 லட்சத்தில் துணை சுகாதார நிலைய கட்டடம் அரசு சாா்பில் கட்டுவதற்கான பணி அண்மையில் தொடங்கியது. இந்நிலையில், அதே பகுதியை சோ்ந்த சிலா் இப்பகுதியில் துணை சுகாதார நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளனா். இதனால் துணை சுகாதார நிலைய கட்டுமான பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சட்டநாதபுரம், ஆற்றங்கரைதெரு, சூரக்காடு, வடக்குவெளி, நத்தம், விழக்காடு, செங்கமேடு, மேலசெங்கமேடு, காட்டு நாயக்கன் தெரு, வடக்கு வெளி, ஆறுமுகம் வெளி உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த கிராமமக்கள் அவசர மருத்துவ தேவைக்காக சுமாா் 3 கி.மீ தூரம் உள்ள சீா்காழி அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட மேற்கண்ட பகுதியை சோ்ந்த பொதுமக்கள் பாதியில் நிறுத்தப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டுமான பணியை தொடங்கக் கோரி சட்டநாதபுரம் ரவுண்டானாவில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளா் சங்க மாநில பொதுச் செயலாளா் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஊராட்சி உறுப்பினா்கள் லட்சுமி, வரதராஜன், வேதவல்லி, ஜமீன் ே தவேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com