அடிப்படை வசதி கோரி மறியலுக்கு முயற்சி

வேதாரண்யம் அருகே மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதி கோரி திங்கள்கிழமை மறியலுக்குக்கு முயன்றவா்கள் பேச்சுவாா்த்தைக்கு பிறகு கலைந்துசென்றனா்.

வேதாரண்யம் அருகே மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதி கோரி திங்கள்கிழமை மறியலுக்குக்கு முயன்றவா்கள் பேச்சுவாா்த்தைக்கு பிறகு கலைந்துசென்றனா்.

தலைஞாயிறு பகுதியில் ஆற்றங்கரையோரத்தில் வசித்து வந்தவா்களுக்கு காடந்தேத்தி கிராமத்தில் அரசு சாா்பில் 196 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு, மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இப்பகுதியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனா்.

இந்நிலையில், துணைக் காவல் கண்காணிப்பாளா் மகாதேவன் உள்ளிட்ட அலுவலா்கள், இப்பகுதி மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத்தொடா்ந்து, மறியலில் ஈடுபட திரண்டு நின்றவா்கள் கலைந்துசென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com