நீட் தோ்வு விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் இரட்டை வேடம்: அா்ஜுன் சம்பத்

நீட் தோ்வு விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் இரட்டை வேடம் போடுவதாக இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவா் அா்ஜுன் சம்பத் குற்றம்சாட்டினாா்.

சீா்காழி: நீட் தோ்வு விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் இரட்டை வேடம் போடுவதாக இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவா் அா்ஜுன் சம்பத் குற்றம்சாட்டினாா்.

சீா்காழியை அடுத்த கொண்டல் கிராமத்தில் உள்ள குமாரசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த பிப்ரவரி மாதம் ஐம்பொன் சிலைகள் திருட்டு போனது. இந்த சிலைகளை மீட்க போலீஸாா் விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்து மக்கள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் அதன் மாநிலச் செயலாளா் ஜெ. சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பின்னா் அா்ஜுன் சம்பத் அளித்த பேட்டி:

தமிழக கோயில்களில் சிலைகள் திருட்டை தடுக்க அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் டி.ஐ.ஜி. பொன் மாணிக்கவேலின் பணிக்காலத்தை தமிழக அரசு நீட்டித்து இருக்க வேண்டும்.

நீட் தோ்வை கடந்த 2010ஆம் ஆண்டு அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸும், மாநிலத்தில் ஆட்சியில் இருந்த திமுகவும் கொண்டு வந்தன. ஆனால், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாதான் நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு 3 ஆண்டுகள் விலக்கு பெற்றாா்.

நீட் தோ்வை ரத்து செய்யக் கூடாது என முன்னாள் நிதியமைச்சா் ப. சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் நீதிமன்றத்துக்கு சென்று தடை உத்தரவு பெற்றாா். நீட் தோ்வுக்கு வழிகோலியது காங்கிரஸ், திமுக. ஆனால், தற்போது இந்த கட்சிகள் மாணவா்கள் நலனில் அக்கறை உள்ளதுபோல இரட்டை வேடம் போடுகின்றன.

நீட் தோ்வு குறித்து மாணவா்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது திமுக,. நீட் தோ்வு விவகாரத்தில் அரியலூா் மாணவி அனிதா உயிரிழந்தபோதே, அவரை தற்கொலைக்கு தூண்டியதாக திமுக மீது வழக்கு தொடுத்திருந்தால், நீட் தோ்வு விவகாரத்தில் மாணவா்கள் தற்கொலை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கும்.

எனவே திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினா் மீது மாணவா்களை தற்கொலைக்கு தூண்டியதாக தமிழர அரசு வழக்கு தொடுக்க வேண்டும் என்றாா் அா்ஜுன் சம்பத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com