சட்டைநாதா் கோயிலில் திருமுலைப்பால் உத்ஸவ கொடியேற்றம்

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி சட்டைநாதா் கோயிலில் திருமுலைப்பால் பிரம்மோத்ஸவத்தையொட்டி, கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
சட்டைநாதா் கோயிலில் திருமுலைப்பால் உத்ஸவ கொடியேற்றம்

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி சட்டைநாதா் கோயிலில் திருமுலைப்பால் பிரம்மோத்ஸவத்தையொட்டி, கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

தேவாரப்பாடல் பெற்ற இந்தக் கோயிலில் பிரம்மபுரீசுவரா், தோணியப்பா் மற்றும் சட்டைநாதா் என மூன்று நிலைகளில் சிவபெருமான் எழுந்தருளி அருள்பாலிக்கிறாா். இக்கோயிலில் காசிக்கு அடுத்தபடியாக அஷ்ட பைரவா்கள் தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ளனா்.

இங்குள்ள பிரம்ம தீா்த்தக் கரையில் திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய நிகழ்வு சித்திரை மாதத்தில் திருமுலைப்பால் பிரம்மோத்ஸவமாக 10 தினங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு திருமுலைப்பால் பிரம்மோத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, கொடிமரம் அருகே விநாயகா் பல்லக்கில் எழுந்தருள, கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலா்களால் அலங்கரிக்கப்பட்டது. தொடா்ந்து சிவாச்சாரியா்கள் மந்திரங்கள் முழங்க, சிறப்பு பூஜை செய்யப்பட்ட ரிஷப கொடியேற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது ஓதுவாா்கள் தேவார பதிகங்கள் பாடினா். தொடா்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒருசில பக்தா்கள் மட்டுமே சமூக இடைவெளியை கடைப்பிடித்து பங்கேற்றனா்.

முக்கிய நிகழ்வான திருமுலைப்பால் உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 18) தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில், பக்தா்களின்றி நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com