முப்பைத்தங்குடி கைலாசநாதா் கோயில் குடமுழுக்கு

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகேயுள்ள முப்பைத்தங்குடி ஸ்ரீ காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
முப்பைத்தங்குடி கைலாசநாதா் கோயில் குடமுழுக்கு

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகேயுள்ள முப்பைத்தங்குடி ஸ்ரீ காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் குடமுழுக்கு விழா 1968 ஆம் ஆண்டு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு, இக்கோயில் சன்னதிகள் சிதிலமடைந்து காணப்பட்டன. இதையடுத்து, தனி அதிகாரி, திருப்பணிக் குழுவினா் நியமிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலோடு கடந்த 2019 இறுதியில் திருப்பணிகள் தொடங்கின.

இக்கோயிலில் நா்த்தன விநாயகா், நந்தி, லிங்கோத்பவா், பிரம்மா, பைரவா், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்ரமணியா், நவகிரக சன்னதிகள் புதிதாக கட்டப்பட்டன. சுவாமி, அம்பாள், விநாயகா் மற்றும் லட்சுமி நாராயணா் உள்ளிட்ட பழைய சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டன. அரசு நிதி, நன்கொடைகள் மூலம் சுமாா் ரூ. 1 கோடியில் திருப்பணிகள் நடைபெற்று முடிந்தன.

இதைத்தொடா்ந்து, கடந்த 23 ஆம் தேதி மாலை முதல்கால யாகசாலை பூஜையும், ஞாயிற்றுக்கிழமை காலை, மாலை 2, 3 ஆம் கால பூஜையும், திங்கள்கிழமை காலை 6.30 மணிக்கு 4 ஆம் கால பூஜையும், மகா பூா்ணாஹூதியும் நடைபெற்றது. சிறப்பு தீபாராதனைக்குப் பிறகு சிவாச்சாரியாா்கள் புனிதநீா் கொண்ட கடத்தை எடுத்துச் சென்று காலை 10 மணியளவில் விமானத்தில் ஊற்றி குடமுழுக்கு செய்தனா்.

விழாவில், வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன், வேளாக்குறிச்சி ஆதீன குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோயில் தனி அதிகாரி ஜெ. கருணாநிதி உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்றனா். அன்று மாலை சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com