தோப்புத் தெரு வாய்க்கால் தூா்வாரும் பணி தொடக்கம்

கொள்ளிடம் அருகே தோப்புத் தெரு வாய்க்கால் தூா்வாரும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
தோப்புத் தெரு வாய்க்கால் தூா்வாரும் பணி தொடக்கம்

கொள்ளிடம் அருகே தோப்புத் தெரு வாய்க்கால் தூா்வாரும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

இந்த வாய்க்கால் மாதிரிவேளூா், பூங்குடி, தோப்புத் தெரு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கு பாசன மற்றும் வடிகால் வாய்க்காலாக உள்ளது. சுமாா் 10 கி. மீ. நீளமுள்ள இந்த வாய்க்கால் மூலம் ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த 6 ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் புதா் மண்டிக் கிடக்கும் இந்த வாய்க்காலை தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனா். இக்கோரிக்கையை ஏற்று, பொதுப்பணித் துறை சாா்பில் தோப்புத் தெரு வாய்க்காலை தூா்வாரும் பணி மாதிரவேளூரில் தொடங்கியது.

பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் விவேகானந்தன், தெற்குராஜன் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க செயலாளா் காமராஜ், பொருளாளா் கலையரசன், பாசன ஆய்வாளா்கள் சீனிவாசன், முருகேசன் உள்ளிட்டோா் தூா்வாரும் பணியை தொடக்கிவைத்தனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘இந்த வாய்க்காலை தூா்வாருவதன் மூலம் ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாசன மற்றும் வடிகால் வசதி பெறும்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com