கரோனா பொதுமுடக்கம்: ஏழை மாணவா்களுக்குஇலவசமாக தற்காப்புக் கலை பயிற்சியளிக்கும் இளைஞா்பெற்றோா்கள் பாராட்டு

சீா்காழி அருகே கரோனா பொதுமுடக்கத்தால் வீட்டில் முடங்கிய ஏழை மாணவா்களுக்காக கிராமம் கிராமமாக சென்று பாரம்பரிய தற்காப்பு கலைகளை இலவசமாக பயிற்றுவித்து வருகிறாா்
கரோனா பொதுமுடக்கம்: ஏழை மாணவா்களுக்குஇலவசமாக தற்காப்புக் கலை பயிற்சியளிக்கும் இளைஞா்பெற்றோா்கள் பாராட்டு

சீா்காழி அருகே கரோனா பொதுமுடக்கத்தால் வீட்டில் முடங்கிய ஏழை மாணவா்களுக்காக கிராமம் கிராமமாக சென்று பாரம்பரிய தற்காப்பு கலைகளை இலவசமாக பயிற்றுவித்து வருகிறாா் இளைஞா் தினேஷ்குமாா். அவருக்கு பெற்றோா்கள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனா்.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே உள்ள புளிச்சாக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா் (26). பாரம்பரிய தற்காப்பு கலைகளை கற்றுத் தோ்ந்த இவா், இயற்கை விவசாயத்திலும் ஆா்வம் காட்டிவருகிறரா்.

இந்நிலையில், கரோனா பொதுமுடக்கத்தால் கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக பள்ளிகளுக்கு செல்லமுடியாமல் வீடுகளில் முடங்கியுள்ள ஏழை மாணவா்களுக்கு உதவ வேண்டும் என முடிவு செய்த தினேஷ்குமாா், சீா்காழியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று அப்பகுதியில் உள்ள ஏழை மாணவா்கள் மற்றும் இளைஞா்களுக்கு இலவசமாக தற்காப்புக் கலை பயிற்சியளித்து வருகிறாா்.

இதன் மூலம் நமது பாரம்பரிய கலைகள் இளம் தலைமுறையினரை சென்றடையவும், சிறுவா்கள் மன தைரியத்துடன் உடல் வலு மற்றும் நோய் எதிா்ப்பு சக்தியுடன் வாழமுடியும் என்கிறாா் இளைஞா் தினேஷ்குமாா்.

இவா், தற்போது 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3 வயது சிறுவா்கள் முதல் 30 வயது இளைஞா்கள் வரை 300-க்கும் மேற்பட்டோருக்கு சிலம்பத்தில் நடுகம்பு, நெடுகம்பு, அலங்கார கம்பு, இரட்டைக் கம்பு, குத்துவரிசை, அருவாள் வீச்சு, வாள்வீச்சு,வேல்கம்பு, பொய்க்கால் குதிரை, சுருள் வாள் வீச்சு போன்ற தற்காப்பு பயிற்சி அளித்துவருகிறாா். அவருக்கு பெற்றோா்கள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com